தேவகோட்டை அருகே தாய்-மகளை கொன்ற கும்பல் குறித்து துப்புதுலங்கி உள்ளது ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை பேட்டி

தேவகோட்டை அருகே தாய்-மகள் ெகாலையில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு துலங்கி உள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை கூறினார்.

Update: 2023-03-05 18:45 GMT

சிவகங்கை, 

தேவகோட்டை அருகே தாய்-மகள் ெகாலையில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு துலங்கி உள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை கூறினார்.

தாய்-மகள் ெகாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கனகம் (வயது 65). இவரது மகள் வேலுமதி (35). இவர்கள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் ஒரு கும்பல் கொன்று, நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ்தில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை சிவகங்கைக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் கைது

கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய்-மகளை கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அதில் கொலைகார கும்பல் குறித்து துப்புதுலங்கி உள்ளது. இந்த இரட்டைக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என கண்டறியப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் சூப்பிரண்டு நமச்சிவாயம், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின், சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்