அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-20 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.முறையூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 61 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். அ.முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் பேசுகையில், தமிழக அரசு வழங்கி வரும் பல நல்ல திட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் பல மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றது. இது போன்ற பள்ளி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பள்ளியில் உள்ள கழிப்பறைகள், சேதமடைந்த கட்டிடங்கள், மாணவர்களின் தேவைகள் ஆகியவற்றை கேட்டறிந்து ஆய்வு செய்யும் நிகழ்வாகவும் அமைகின்றது. மாணவர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கும், அரசுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பல முத்து, சோமசுந்தரம், சிங்கம்புணரி நகர தி.மு.க. அவைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிளை தலைவர் கரு கோபாலன், முறையூர் அம்பலக்காரர் விஸ்வநாதன், முறையூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கதிரேசன், ஊராட்சி செயலர் மதிவாணன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில், பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, மக்கள் நல பணியாளர் சொக்கநாதன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர்கள் சிவபுரிசேகர், முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முறையூர் ஊராட்சி சுரேஷ் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்