வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

குன்னூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2023-05-07 00:00 GMT

குன்னூர்

குன்னூர் அருகே வெள்ளாளபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாம்பு சீதாலட்சுமி என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. அங்கு சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் அருகே பதுங்கி இருந்தது. இதுகுறித்து குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமையலறையில் இருந்து பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது சாரை பாம்பு ஆகும். இதைத்தொடர்ந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை அருகே வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்