ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் இன்று மறைமுக ஏலம் நடைபெறாது
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் அரசு வேலை நாட்களில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு மறைமுக ஏலம் நடைபெறுவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை) மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால், வேளாண்மை விற்பனை கூடத்தில் இன்று மறைமுக ஏலம் நடைபெறாது. சனி, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல் மறைமுக ஏலமானது வருகிற 25-ந்தேதி நடைபெறும். மேலும் வருகிற 26-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவையொட்டி அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், அன்றைய தினமும் மறைமுக ஏலம் நடைபெறாது என்று ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.