இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் கொடிகட்டி பறக்கிறது - ப.சிதம்பரம் விமர்சனம்

இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் இரண்டும் கொடிகட்டி பறக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Update: 2022-09-07 12:55 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது:-

இந்தியாவில் எந்தக் கொடி மேலே பறக்கிறதோ இல்லையோ, வேலையின்மை மற்றும் பணவீக்கம் இரண்டும் கொடிகட்டி பறக்கிறது. இந்த கொடியை தான் பிரதமர் மோடியும், நிதி அமைச்சரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணவீக்கத்தையும் வேலையின்மையையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் மக்களை ஒன்றுபடுத்துவதற்காகவும் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற உணர்வை வளர்ப்பதற்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். ஆனால் மத வேறுபாடு, சாதி வேறுபாடு, மொழி வேறுபாடு, ஆகிய வேறுபாடுகளை தான் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்