இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்க வாய்ப்பு

நடப்பு நிதியாண்டில் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு உலகநிதி நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள நிலையில் பண வீக்கம் 6.8 சதவீதமாக இருந்த போதிலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.

Update: 2023-10-04 18:45 GMT

விருதுநகர்

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஆசிய வளர்ச்சி வங்கியும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் விவசாயத்துறையில் 3.4 சதவீதமும் தொழில்துறையில் 5.7 சதவீதமும் சேவை துறையில் 7.4 சதவீதமும் வளர்ச்சியிருக்கும் என்றும் முதலீட்டு வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

வட்டி விகிதம்

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பணவீக்கம் 7.4 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையில் கடந்த 8 மாதங்களாக வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.

கடந்த 2022 ஜனவரியில் 4 சதவீதமாக இருந்த வங்கி வட்டி சதவீதம் மே மாதம் 4.4 சதவீதமாகவும், ஜூலையில் 5.4 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 6.2 5சதவீதமாகவும், நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் 6.5 சதவீதமாகவும் உயர்ந்தது.

ஆலோசனை குழு கூட்டம்

பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை விட கூடுதலாக இருந்த போதிலும் தற்போது ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை மாற்ற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்