ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா

கடலூர் ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Update: 2022-08-15 19:25 GMT

கடலூர், 

கடலூர் லாரன்ஸ்ரோட்டில் அமைந்துள்ள ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நிறுவனர் தில்சுக்மல்மேத்தா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் சுக்வீர்சந்த், அரிஹந்த் ஜூவல்லரி தர்மேந்தர், ராகேஷ் பண்டாரி, மகேஷ் நாட்டா, வள்ளிவிலாஸ் ஆத்மா, ஆர்.எம். மஹாவீர் ஜூவல்லரி அரிஹந்த்மேத்தா, ஸ்டார் மகாவீர் ஜூவல்லரி சும்திகுமார் மேத்தா, விக்னேஷ் ஜூவல்லரி வி.டி.செல்வம், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெய்மஹாவீர் ஜூவல்லரி நிறுவனர்கள் அசோக்குமார் மேத்தா, பிரதீப்குமார் மேத்தா, சுரேஷ்குமார் மேத்தா, ஹித்தேஷ், முக்கேஷ், ஆதேஷ் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் நகை கடை முன்பு மூவர்ண பலூன்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஊழியர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்