கடலை எண்ணெய் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,400 முதல் ரூ.10,100 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.12,500 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.10,200 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.10,300 ஆகவும், பாசிப்பயறு ரூ.9,600 முதல் ரூ.10,700 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.13 ஆயிரம் முதல் ரூ.17,200 வரையிலும் விற்பனையானது.
மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,200 முதல் ரூ.3,400 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை உயர்ந்து ரூ.3 ஆயிரம் ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.7,425 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.1340 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.
கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.6,300 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.200 விலை உயர்ந்து ரூ.2,650 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.4,100 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.6,300 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.5 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது.
மைதா முதல் ரகம் ரூ.4,470 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,460 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,530 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,400 ஆகவும் விற்பனை ஆனது.
பட்டாணி 100 கிலோ ரூ.6,200 முதல் ரூ.6,500 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6,400 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.15,500 ஆகவும், ஏ ரகம் ரூ.15,500 ஆகவும், சி ரகம் ரூ.14,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.13,150 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11500 ஆகவும் விற்பனையானது.