பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-11-16 05:20 GMT

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணிகளில், 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன. இதற்கான நேரடி நியமன போட்டித் தேர்வு, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு, பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 360 பட்டதாரி மற்றும் வட்டார வள மைய பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுனர் பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.

கூடுதல் காலிப்பணியிடங்கள் விவரங்களை https://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்