நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு - வரும் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

Update: 2022-06-26 19:48 GMT

சென்னை,

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

இதன்படி நாவலூர் சுங்கச் சாவடியில் ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கார்களுக்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.33-ஆகவும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்