தொடர் மழை எதிரொலி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக ஏரிகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 21 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மேலும் சென்னையில் உள்ள மூன்று ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வாலாஜாபேட்டையில் உள்ள அணைக்கட்டு தடுப்பணையில் அதிக அளவில் நீர் வந்தது. எனவே, இதிலிருந்து 1350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.
காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.