குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்

முள்ளிமலை அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது.

Update: 2023-10-16 21:15 GMT

மஞ்சூர் அருகில் உள்ள முள்ளிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பாக்கோரை பீமன் கலந்துகொண்டு பேசினார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் மன்றத்தை தொடங்கி வைத்து பேசும்போது, பொருட்களை வாங்கி குவிக்கும் கலாசார வலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இதனால் கடன், லஞ்சம், வரதட்சணை போன்ற சமூக தீமைகள் புரையோடி உள்ளன. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவேஇ மாணவர்கள் தங்கள் இளம் பருவத்திலேயே எளிமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். உடல் நலத்தை பாதிக்கும் உணவு வகைகளான பரோட்டா, நூடுல்ஸ், ரசாயனம் கலந்த பானங்கள், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். சங்க செயலாளர் ஆல்துரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கங்கள், பிரிவுகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கினார். மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்