அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் புரவலர் திட்டத்தின் கீழ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா ரூ.10,000 தனது சொந்த நிதியின் கீழ் வழங்கி பேசினார்.

இதில், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவைத் தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர செயலாளர் கதிர்வேல், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், பேருராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில், பிரதிநிதி குடோன்மணி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், புகழேந்தி, சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி மனோகரன், மருத்துவர் அருள்மணி நாகராஜன், மாணவரணி முரசொலி கார்த்திக், அமுதன், மாடன் சையது, கிருங்காகோட்டை ஊராட்சி தலைவர் அகிலா கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராசியப்பன், ஊர் அம்பலக்காரர் ேஜாதிபாசு, தி.மு.க. பிரமுகர் செல்வம், ஊராட்சி செயலர் மகேஷ், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், லட்சுமண ராஜூ, கிருங்காகோட்டை வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கோபி, மீனா, மலையரசி, பாரதி, முத்துலட்சுமி, கஸ்தூரி, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்