புதிய கட்டிட திறப்பு விழா

அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-04 19:00 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பில், ரூ.50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கான அடிக்கல்லை திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிலக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத் வரவேற்றார்.

பேரூராட்சி துணைத்தலைவர் விமல்குமார், நிலக்கோட்டை தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல்அலுவலர் பூங்கொடி முருகு, அம்மையநாயக்கனூர் தி.மு.க. பேரூர் செயலாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மாரிவேல், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்