தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.வணிக வளாகத்தில் தமிழக தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் அருணா தொல்காப்பியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் முதன்மை ஆலோசகரும், மவுண்ட் பார்க் பள்ளியின் தாளாளருமான பொன்.இரா.மணிமாறன், சங்கத்தின் செயலாளரும் இ.சி.ஆர்.பள்ளி தாளாளருமான ரவிக்குமார், சங்கத்தின் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எஸ்.ஆர்.சிராஜுதீன் வரவேற்றார். சங்க அலுவலகத்தை ஏ.கே.டி.பள்ளி தாளாளரும், சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ.கே.டி. மகேந்திரன் திறந்து வைத்தார். விழாவில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா குருகுலம் சகோதரிகள், ஏ.கே.டி. பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி, விவேகானந்தா பள்ளி தாளாளர் மணி, வான்மதி பள்ளி தாளாளர் சின்னதுரை, சங்கராபுரம் ஜோசப் பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன், ஆக்ஸ்போர்டு பள்ளி கோகுல்ராஜ், நர்சரி பள்ளிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவூப் மற்றும் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான பள்ளிகளில் மாற்றுசான்றிதழ் குறித்த பிரச்சினைகளுக்கு உயர் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எனவும், மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவிலான சட்ட பாதுகாப்புக்குழு வக்கீல்கள் துரைராஜ், ரவி, இளமுருகன், சுஜாதா, ஹேமா சம்பத் உள்ளிட்ட குழுவினரின் பணி குறித்த ஆய்வு கூட்டம், சங்க நிர்வாக விதிமுறைகள் விளக்க கூட்டம் மற்றும் மாதாந்திர கூட்டம் ஆகியவற்றை அடுத்த மாதம்(அக்டோபர்) 8-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் ஜோசப் சீனுவாசன் நன்றி கூறினார்.