பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்க விழா

தேனி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்க விழா நடந்தது.

Update: 2022-09-24 17:33 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தை சென்னை வண்டலூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேனி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழா வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடவு செய்து இந்த இயக்க பணியை தொடங்கி வைத்தார். விழாவில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், வனச்சரகர் அருள்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிவகாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்