தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி

சீர்காழி நகர் பகுதியில் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது

Update: 2023-04-08 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் வாசுதேவன், சுகாதார அலுவலர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் வரவேற்றார். விழாவில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியை நகர சபை தலைவர் தொடங்கி வைத்து பேசுகையில், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட வளாகங்களில் முதல் கட்டமாக முழு சுகாதார தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் வரும் சனிக்கிழமையில் நகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் தூய்மை மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள உள்ளது என்றார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்