அய்யா வைகுண்டர் கோவில் திறப்பு விழா
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அய்யா வைகுண்டர் கோவில் திறப்பு விழா நடந்தது.;
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி தெற்கு மெயின் ரோடு கோமதிநகரில் அய்யா வைகுண்டரின் தர்மபதி கோவில் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மாங்குளம் அய்யாபதி தர்மகர்த்தாவும், கிரிஸ்மால் நிர்வாக இயக்குனருமான மூர்த்தி அரிகிருஷ்ணன் தலைமை தாங்கி, அய்யா வைகுண்டரின் தர்மபதி கோவிலை திறந்து வைத்தார். செல்வராஜ், ஜி.என்.பிச்சுமணி, லட்சுமி, விசாலாட்சி, மாரியம்மாள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, மாலையில் திருஏடு வாசிப்பு, பணிவிடை நடைபெற்றது. காலை முதல் மாலை வரையில் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.
விழாவில் மானூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் எஜமான் என்ற செந்தில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆனந்தராஜ், சின்னத்துரை மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.