ரூ.25 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான தொடக்க விழா
ரூ.25 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா பூவலூர் ஊராட்சியில் உள்ள மாவடிக்கோட்டை கிராமத்தில் நேற்று ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அரசு நிதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். இதில் மாவடிக்கோட்டை கிராம தலைவர் வக்கீல் ராமநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன், ஆவுடையார்கோவில் ஒன்றிய ஆணையர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.