வலங்கைமானில், டாஸ்மாக் கடைக்கு நாளை விடுமுறை

வலங்கைமானில், டாஸ்மாக் கடைக்கு நாளை விடுமுறை

Update: 2023-03-04 18:45 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை எண் 9836 மற்றும் அதனைச்சார்ந்துள்ள மதுபான கூடத்தை மூட வேண்டும். மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய மதுபானக்கடையின் மேற்பார்வையாளர் மற்றும் மதுகூடத்தின் ஏலதாரர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்