விளாத்திகுளத்தில்தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி. யு.சி உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி ஏ.ஐ.டி.யூ.சி உள்ளாட்சி தூய்மை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணி உள்ளிட்ட உள்ளாட்சிப் பணிகளில் வெளியாட்களை பணியமர்த்த கூடாது, 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.