விளாத்திகுளம் பகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்

விளாத்திகுளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் சனிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

Update: 2023-02-09 18:45 GMT

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு நாளை( சனி) மற்றும் நாளைமறுநாள்(ஞாயிற்று கிழமை ஆகிய 2 நாட்கள் விளாத்திகுளம் பகுதியிலுள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் சென்று ஆதார் எண்ணை இணைத்து பயனடையலாம் என்று விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்