வீரபாண்டி பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் திருட்டு
வீரபாண்டி பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் திருடுபோனது.
விருதுநகர் மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் மரம் ஏறுவதற்காக வந்தார். அன்று இரவு மோட்டார்சைக்கிளை தோட்டத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பாா்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை.
இதேபோல், வீரபாண்டி அருகே உள்ள வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் பாலாஜி. கடந்த 7-ந்தேதி இரவு இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து மகாலிங்கம், கிருஷ்ணன் பாலாஜி ஆகியோர் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள்களை திருடி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.