தூத்துக்குடியில் ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் ரூ.3¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 15 பேருக்கு தையல் எந்திரம், ஒருவருக்கு சைக்கிள், 12 பேருக்கு உதவித் தொகை, 700 பேருக்கு ஹாட்பாக்ஸ் ஆக மொத்தம் 728 பேருக்கு ரூ.3 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
ஒத்துழைப்பு
அப்போது, மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம். இக்கட்டான நேரத்திலும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் நமது முதல்-அமைச்சர். மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசு அலுவலர்களும் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனாலும் சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் கொடுத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.