எம்.ஜி.ஆர் சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி கிப்சன்புரம் பகுதியில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் நேற்று முன்தினம் மூத்த நிர்வாகிகளின் பெயர்களை எழுதி வைத்து உள்ளனர். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்கள் அந்த பெயர்களை அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை இதில் எந்தவித மாற்றங்களும் செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதனை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு புறப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.