தூத்துக்குடியில் தமிழ்தேச தனினுரிமைகட்சி கூட்டம்

தூத்துக்குடியில் தமிழ்தேச தனினுரிமை கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-08-27 18:45 GMT

தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் அ.வியனரசு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தங்கராசு, துணை பொதுச் செயலாளர் சுரேஷ், தென்மண்டல செயலாளர் பா.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச செயலாளர் சு.சீனிவாசன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ் ஆர்வலர் சேரன்துரை கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி முதல் காயாமொழி வரை உள்ள சாலைக்கு " "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் சாலை என பெயரிட வேண்டும், தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் பஸ்நிலையம் முன்பு சி.பா.ஆதித்தனார் முழுஉருவ சிலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும். தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை முதல் புன்னக்காயல் வரை ஆற்றை ஆக்கிரமித்து உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, 53 பாசன குளங்களையும் குடிமராமத்துத் திட்டங்களின்படி மறு சீரமைப்பு செய்ய வேண்டும், தாமிரபரணி உபரிநீரை, எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வந்து, மானவாரி பகுதிகளை இருபோக விளைச்சல் நிலங்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வீ.முத்துமாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்