தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-26 18:45 GMT

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த 2 பேரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

தீவைப்பு

தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருடைய மகன் தேவசிங் (வயது 46). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தேவசிங் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், தூத்துக்குடி தாமோதர நகர் 2-வது தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பொன்செல்வம் (21), வண்ணார் 3-வது தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் மைக்கேல்ராஜ் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கெங்கைநாதபாண்டியன் ஆகியோர் பொன்செல்வம், மைக்கேல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

காரணம் என்ன?

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்களுக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தாமோதரநகர் பகுதியில் தகராறு நடந்து உள்ளது.

இதனால் தங்களுடன் தகராறில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிள் என்று கருதி தேவசிங்கின் மோட்டார் சைக்கிளை 2 பேரும் எரித்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்