தூத்துக்குடியில்ரோட்டில் தவித்த குழந்தைபெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடியில் ரோட்டில் தவித்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-04-07 18:45 GMT

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவில் சுமார் 1½ வயது பெண் குழந்தை ஆதரவின்றி தெருவில் நிற்பதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உத்தரவின் பேரில், மத்தியபாகம் தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு ஆதரவின்றி நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, அந்த குழந்தையை அண்ணாநகரில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்