தூத்துக்குடியில் 5 பெண்களுக்கு ஆதரவற்றோர் விதவை சான்று

தூத்துக்குடியில் 5 பெண்களுக்கு ஆதரவற்றோர் விதவை சான்றை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

Update: 2023-07-03 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 350 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார். கூட்டத்தில் 5 பெண்களுககு ஆதரவற்ற விதவை சான்றை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக தரைதளத்தில் அமரவைக்கப்பட்டு இருந்த மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து 25 கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்