திருமங்கலம் பகுதியில் மழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு நிவாரணம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

திருமங்கலம் பகுதியில் மழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரணம் வழங்கினார்

Update: 2023-09-23 21:20 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரி கிராமத்தில் 2 நாட்களாக பெய்த மழைக்கு தங்களாச்சேரியில் பெருமாள் மனைவி முத்தம்மாள் மற்றும் கார்த்திகைசாமி மனைவி பெத்தம்மாள் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. பகலில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சவடார்பட்டி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சுவாமிநாதன், கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி செல்வம், மாணவரணி இணைச் செயலாளர் வாகைக்குளம் சிவசக்தி, கள்ளிக்குடி ஒன்றிய துணைத்தலைவர் கலையரசி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்