கோவில்பட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று காலையில், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி- தொழில் வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட அவை தலைவர் என்.கே.பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் , நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.