சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 111 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு

நெல்லை மாவட்டத்தில் நடந்த சிறப்பு நீதிமன்றத்தில் 111 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3.85 கோடி சமரச தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-07-08 19:53 GMT

நெல்லை மாவட்டத்தில் நடந்த சிறப்பு நீதிமன்றத்தில் 111 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3.85 கோடி சமரச தொகை வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகம் மற்றும் 4 தாலுகா கோர்ட்டுகளில் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நெல்லையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சீனிவாசன், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது ஆகியோர் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.

இதில் நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிபதி குமரேசன், மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிபதி மோகன்ராம், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மாள், மாஜிஸ்திரேட்டுகள் திருவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார், முரளிநாதன் மற்றும் நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் முகமது இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.3¾ கோடி சமரச தொகை

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 206 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 111 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 84 லட்சத்து 96 ஆயிரத்து 162 சமரச தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய 21 வங்கி கடன் வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.31.15 லட்சம் சமரச தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்