கம்பம் பகுதியில் 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கம்பத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வின்போது 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-07-17 13:56 GMT

கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சுரேஷ் கண்ணன், வைகை அணை மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் ஓடைக்கரைத்தெரு, வ.உ.சி. தெரு பகுதியில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில கடைகளில் மொத்தம் 25 கிலோ கெட்டுபோன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் தொடர்ந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்