நிலப்பிரச்சினையில்வேலியை சேதப்படுத்திய விவசாயி மீது வழக்கு
பெரியகுளத்தில் வேலியை சேதப்படுத்திய விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம் தென்கரை கோட்டைத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 76). விவசாயி. இவரது தென்னந்தோப்பு சோத்துப்பாறை செல்லும் சாலையில் உள்ளது. இவருக்கும் முத்துராஜா தெருவை சேர்ந்த மதுரைவீரன் என்பவருக்கும் நிலப் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் மாரிமுத்துவின் தோட்டத்தில் ேபாடப்பட்டிருந்த வேலி மற்றும் நடப்பட்ட கற்களை உடைத்து மதுரைவீரன் சேதப்படுத்தினார். இதனை மாரிமுத்து தட்டி கேட்டார். அதற்கு அவர் மாரிமுத்துவை தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மதுரைவீரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.