திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில்2 முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-06-25 17:52 GMT

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமானை கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அபினாஷ், நவீன், பிரேம் ஆனந்த், அவரது மனைவி ரமணி, மற்றொரு நவீன், 17 வயதுடைய சிறுவன் மற்றும் ரேவதி, நித்யா ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவணன், தன்ராஜ் ஆகிய 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமான் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி மெயின் ரோடு அண்ணா சாலையை சேர்ந்த ராஜவேலின் மகன் தீனா என்ற தீனதயாளன் (வயது 33), நெத்திமேடு காமராஜர் நகரை சேர்ந்த மூர்த்தி என்ற தட்சிணாமூர்த்தி(30) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்த பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்