தூத்துக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-10-11 18:45 GMT

தூத்துக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளி. இவர் பட்டா மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் சந்திரேயா (வயது 69) என்பவரிடம் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதற்காக சந்திரேயா ரூ.500 லஞ்சம் கேட்டாராம். இதைத் தொடர்ந்து நாகராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து 15.3.2010 அன்று நாகராஜ், சந்திரேயாவிடம் சென்று ரூ.500 பணம் கொடுத்து உள்ளார். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சந்திரேயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

2 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட சந்திரேயாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்