தஞ்சையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் நேற்று நடைபெற்றது. அதன்படி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, வட்ட பொறுப்பாளர்கள் பாலாஜி, ராஜகுமார், பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றை உடனே வழங்கவேண்டும். பயணப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். நகர நிலவரி திட்ட கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.