சேலையூரில் குடியிருப்பு பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

சேலையூரில் குடியிருப்பு பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-11-10 09:23 GMT

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காலி நிலங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே போல் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்