சத்தியமங்கலத்தில்கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் என்பவரை அலுவலகத்தில் நுழைந்து மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி சத்தியமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.