சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.960-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.960-க்கு ஏலம் போனது.

Update: 2023-09-18 21:47 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.960-க்கும், முல்லை ரூ.500-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.67-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் ஏலம் போனது. 

Tags:    

மேலும் செய்திகள்