புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2022-09-22 21:26 GMT

புஞ்சைபுளியம்பட்டி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஓ.எம்.எ.சலாம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டியில் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பவானிசாகர் பிரிவு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலில் கட்சியின் மாவட்ட செயலாளர் முசீர் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் காரணமாக சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பவானிசாகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் வரை கோஷங்கள் எழுப்பிய அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்