மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணியை தலைமைச் செயலாளர் ஆய்வு
மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 50 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. தற்போது ஏரி தூர்வாரப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வள ஆலோசகர் காந்திமதி நாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், பரத், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.