பட்டுக்கோட்டையில், ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டையில் நடந்த ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கத்தை அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-06 20:13 GMT

பட்டுக்கோட்டை:

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க ஜனாதிபதியை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் பட்டுக்கோட்டையில் நடந்தது. நகர ம.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபாரதி விசுவநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன், நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் பேசினர். இதில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ம.தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்