நாலாட்டின்புத்தூரில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
நாலாட்டின்புத்தூரில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூரில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் ெசய்தனர்.
போலீசார் வாகன சோதனை
நாலாட்டின்புத்தூர் பகுதியில் வாகனங்களில் சிலர் புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜெஸ்டின் மற்றும் போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நாலாட்டின்புத்தூர் வி.பி.சித்தன் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் கடத்தல்
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார் ைசக்கிளில் 50 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் நாலாட்டின்புத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் துரைப்பாண்டி(வயது44) என்றும், விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கடத்தி செல்வதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.