தேனியில்மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

தேனியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-18 18:45 GMT

தேனி பாரஸ்ட்ரோடு 4-வது தெருவை சேர்ந்த பிச்சைமணி மகன் பிரபு (வயது 34). எலக்ட்ரீசியன். நேற்று இவர், பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மின்மோட்டார் பழுது பார்ப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பிரவுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்