தேனியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனியில் கட்டுமான ெதாழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், மழைக்கால நிவாரணம் ரூ,2 ஆயிரம் வழங்க வேண்டும், இயற்கை மரண நிவாரண நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில குழு தலைவர் பிச்சை மணி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் கட்டுமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.