கோபியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம்
கோபியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடத்தூர்
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ேபாலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, துரைபாண்டி, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய இடத்தில் சிலைகளை வைக்க கூடாது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். மத வழிபாட்டு தலங்கள் முன்பு அமைதியான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறைகளை கடை பிடிக்கவேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கூட்டத்தில் பேசினார்.