நோய் தாக்குதலால் பருத்தி விளைச்சலில் மகசூல் குறைவு

நோய் தாக்குதலால் பருத்தி விளைச்சலில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2022-06-18 18:52 GMT

காரியாபட்டி, 

நோய் தாக்குதலால் பருத்தி விளைச்சலில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

திருச்சுழி, காரியாபட்டி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் பருத்தியை பயிரிட்டுள்ளனர். பருத்தி நன்கு வளர்ந்து காய்கட்டும் நேரத்தில் நோய் தாக்கியதில் பருத்திகாய் முழுவதில் பூச்சி ஏற்பட்டு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு 1 கிலோ பருத்தி ரூ.110-க்கு விற்பனையான நிலையில் உரிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஓரளவு பருத்தி விளைந்ததாலும் தற்போது பருத்தியின் விலை ரூ. 70க்கு வந்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டமடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி, திருச்சுழி தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தியில் நோய் தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்து விட்டது.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விவசாயத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பருத்தி விவசாயம் செய்ய உகந்த நேரம், எந்த உரம், மருந்து தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். அதன்படி விவசாயிகள் தங்கள் மகசூலை பெருக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்