சின்னசேலம் ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலை கரைப்பு

சின்னசேலம் ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

Update: 2022-09-02 16:28 GMT

சின்னசேலம் பகுதியில் 24 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்த சிலைகள் அனைத்தும் சின்னசேலம் ஏரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏரியில் அதிகளவு ஆழம் இருந்ததாலும், அதிகளவு தண்ணீர் சென்றதாலும், பொதுமக்கள் யாரும் ஏரியில் இறங்கி விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது என்றும், மாறாக பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால்நேரு, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஏரிக்குள் பொதுமக்கள் யாரும் இறங்காத வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது.

இதில் முதலாக சின்னசேலம் காந்தி நகரில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 அடி உயரமுள்ள சக்தி புத்தி விநாயகர் சிலையை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து, பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் கரைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னசேலம் பகுதியில் உள்ள 23 சிலைகளும் ஏரியில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் கரைப்பு பணியில் தாசில்தார் அனந்தசயனன், மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதேபோல் சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட சிலைகள் அந்தந்த ஊர் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்