அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாைழத்தார் ஏலம் நடைபெற்றது. எண்ணமங்கலம், கோவிலூர், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதி விவசாயிகள் 1936 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் இதில் கதலி ரகம் கிலோ ரூ.58-க்கும், நேந்திரம் ரூ.42-க்கும், பூவன் ஒரு தார் ரூ.750-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், தேன்வாழை ரூ.600-க்கும், ரஸ்தாளி ரூ.520-க்கும், ரொபஸ்டா ரூ.370-க்கும், மொந்தன் ரூ.400-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வாழைத்தார் விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை பகுதி வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கிச்சென்றார்கள்.